என்னை திருத்த கமலுக்கு உரிமை இல்லை: காயத்ரி ரகுராம் ஆவேசம்!

திங்கள், 7 ஆகஸ்ட் 2017 (11:35 IST)
நேற்று ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரசிகர்களின் குரலாக நடிகர் கமல்ஹாசன் செயல்பட்டார். ரசிகர்கள் கேட்க நினைத்த பல கேள்விகளை கமல் கடுமையாகவும் மனம் புண்படாதபடியும் பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்களிடம் கேட்டார்.


 
 
குறிப்பாக காயத்ரி ரகுராம் குறித்து கமல் எதுவும் கேட்கவில்லை எனவும், அவர் தொடர்ந்து அசிங்கமாக பேசி வருகிறார். கமல் ஏன் அவரை கண்டிக்காமல் இருக்கிறார் என பலரும் டுவிட்டர் மூலம் கமலை குற்றம்சாட்டி வந்தனர். இந்நிலையில் நேற்று அதற்கான பணியை செய்தார் கமல்.
 
காயத்ரி ரகுராமை கன்ஃபசன் ரூமிற்கு அழைத்த கமல் அவர் பேசும் வார்த்தைகள் குறித்து கண்டித்தார். அப்போது குறிப்பாக அவர் கூறும் ஹேர் அதாவது தமிழில் மயிறு என்ற வார்த்தை குறித்து கேட்டார். அதற்கு பதில் அளித்த காயத்ரி ரகுராம் தனது வார்த்தை குறித்து வரும் தெரிவிக்காமல் சிரித்துக்கொண்டு இவ்வளவு கெட்ட வார்த்தையை குறைத்துக்கொண்டதே பெரிய விஷயம் என பதில் அளித்தார்.
 
அதனை கேட்ட கமல் அதிர்ச்சியடைந்தார். மேலும் இது போன்று இன்னும் பேச வேண்டாம் குறைத்துக்கொள்ளுங்கள் என எச்சரித்து அனுப்பினார். இந்நிலையில் இன்று வெளியான புரோமோ வீடியோவில் கமல் கூறியது குறித்து பிக் பாஸ் வீட்டில் உள்ள சக போட்டியாளர்களிடம் காயத்ரி ரகுராம் பேசிக்கொண்டு இருந்தார்.
 
அப்போது கமல் தன்னை கெட்ட வார்த்தை பேசுவது என அடிக்கடி குறிப்பிடுகிறார். ஏன் என்னை அப்படி காட்ட வேண்டும். மீண்டும் மீண்டும் கமல் என்னை ஏன் கெட்ட வார்த்தை போடுவது குறித்து பேசுகிறார். என்னை திருத்த என் அம்மாவுக்கு மட்டும் தான் உரிமையுள்ளது என கூறினார். கமலுக்கு என்னை திருத்த உரிமையில்லை என்பதை காயத்ரி ரகுராம் இப்படி கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்