கமல் அரசியலுக்கு வருவது குறித்து நடிகர் விவேக் கருத்து

சனி, 23 செப்டம்பர் 2017 (11:54 IST)
தமிழக அரசியலை பற்றி தனது கருத்துகளின் மூலம் அதிர்வலைகளை ஏற்படுத்திவந்த நடிகர் கமல்ஹாசன், சமீபகாலமாக  மேடைகளிலும் அரசியல் பேச தொடங்கிவிட்டார். இதனால், கமல்ஹாசனின் அரசியல் பிரவேசம் குறித்து கேள்விகள் எழுந்த நிலையில், கெஜ்ரிவால், கமல்ஹாசனை சந்தித்தார்.

 
கமல்ஹாசன் பேட்டி ஒன்றில் கூறுகையில் நான் அரசியலுக்கு வருவேன் என்று உறுதியாகவே கூறிவிட்டார். மேலும்  தமிழகத்தில் இன்னும் 100 நாட்களில் தேர்தல் வந்தால் அதனை தனியாக சந்திக்க தயார் என்றும் கூறியுருந்தார். இதனை  தொடர்ந்து அவருக்கு பல ஆதரவும், எதிர்ப்பும் வந்துக்கொண்டே இருக்கின்றது.

 
இந்நிலையில் நடிகர் விவேக் ‘அரசியலுக்கு வருவதை உறுதி செய்த கமல், அவர் மனத்திண்மையைப் பாராட்டுகிறேன். இந்த  உறுதி இறுதி வரை இருக்க நேர்மையாளரின் சார்பில் வாழ்த்துகிறேன்’ என்று கூறியுள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்