ஒரே படத்திலேயே ஆடி கார் வாங்கிய இயக்குனர்! அம்மாவுக்கு பிறந்தநாள் பரிசு!

வெள்ளி, 27 ஆகஸ்ட் 2021 (17:03 IST)
2020 ஆம் ஆண்டு பிப்ரவரி 14 ஆம் தேதி காதலர் தினத்தன்று வெளிவந்த ‘ஓ மை கடவுளே’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

2020 ஆம் ஆண்டு பிப்ரவரி 14 ஆம் தேதி காதலர் தினத்தன்று வெளிவந்த ‘ஓ மை கடவுளே’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதன்  பின்னர் ஒடிடி தளத்தில் வெளியான போதும் மிகப்பரவலான கவனத்தைப் பெற்றது.  இந்த படத்தை பல திரையுலக பிரபலங்கள் பாராட்டினர். இளைஞர்களுக்கு மிகவும் பிடித்திருந்த இந்த படத்தை அறிமுக இயக்குனர் அஷ்வத் மாரிமுத்து இயக்கி இருந்தார்.

இந்த படத்தின் வெற்றியால் இப்போது தெலுங்கிலும் அந்த படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில் தனது அம்மாவின் பிறந்தநாளுக்கு புத்தம் புதிய ஆடி காரை வாங்கி பரிசாக அளித்து மகிழ்ந்திருக்கிறார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்