இது குறித்து திருப்பதி தேவஸ்தானம், வனத்துறையில் புகார் அளித்துள்ளது. திருப்பதிக்கு நடைபாதையாக ஏராளமான பக்தர்கள் சென்று கொண்டிருக்கும் நிலையில், அலிபிரி நடைபாதை எப்போதும் பிஸியாகவே இருக்கும்.
இந்த நிலையில், திடீரென ஏழாவது மைலில் பக்தர்கள் நடந்து சென்று கொண்டிருந்தபோது, ஒரு சிறுத்தை திடீரென நடைபாதையில் வந்து நின்றது. இதனால் பக்தர்கள் அலறி அடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். அதன் பின்னர் தேவஸ்தான அதிகாரிகள், வனத்துறை அதிகாரிகளுடன் இணைந்து வந்து சிறுத்தையை வனப்பகுதிக்குள் விரட்டினர்.
மேலும் பக்தர்கள் தனித்தனியாக செல்ல வேண்டாம் என்றும் குழுவாக செல்ல வேண்டும் என்றும் அறிவுறுத்தினர். மேலும், சிறுத்தையின் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், வனவிலங்குகளை கண்டால் உடனே தேவஸ்தானத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் பக்தர்களுக்கு தேவஸ்தான அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.