சூர்யாவின் 45வது படம்: ’ இயக்குனர் , இசையமைப்பாளர் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு..!

Siva
செவ்வாய், 15 அக்டோபர் 2024 (07:21 IST)
சூர்யாவின் 45வது படத்திற்கான அதிகாரப்பூர்வ தகவல் தற்போது வெளியாகி, இந்த படத்தின் இயக்குனர் மற்றும் இசையமைப்பாளர் பற்றிய முக்கிய விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளன.

சூர்யா நடித்த 43ஆவது படமான "கங்குவா" நவம்பர் 14ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில், அவர் ’சூர்யா 44’ படத்தில் நடிப்பை முடித்துள்ளார், இதன் இயக்குனராக கார்த்திக் சுப்புராஜ் இருந்தார். படப்பிடிப்பு நிறைவடைந்து, தற்போதைய நிலையில் படத்தின் பிற பணிகள் நடைமுறையில் உள்ளன.

அதனைத் தொடர்ந்து, சூர்யாவின் 45வது படத்தை ஆர்.ஜே. பாலாஜி இயக்குவார் என உறுதிப்படுத்தப்பட்டு, ஒரு புதிய போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. போஸ்டரில், அரிவாளில் திருநீறு, குங்குமம் உதிர்த்த நிலையில் நடுவில் வேல் அமைந்திருப்பது ரசிகர்களிடையே மிகுந்த ஆர்வத்தை உருவாக்கியுள்ளது. மேலும், இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கவுள்ளார், தயாரிப்பை ட்ரீம் வாரியர் நிறுவனம் மேற்கொள்ள உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படத்தில் நடிக்கும் முக்கிய நடிகர், தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றிய தகவல்கள் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. சூர்யா மற்றும் ஆர்.ஜே. பாலாஜி முதல் முறையாக இணையும் இந்த படம், ஏ.ஆர். ரஹ்மான் இசையால் கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.



தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்