கொரோனா உதவி: நடிகர் சோனு சூட்டை கடவுளாக வழிபட்ட மக்கள் - வீடியோ

Webdunia
புதன், 17 ஜூன் 2020 (14:28 IST)
நடிகர் விஜயகாந்த் நடித்த கள்ளழகர் படத்தில் நடித்து, பின் அருந்ததி படத்தின் புகழ்பெற்றவர் நடிகர் சோனு சூட். இவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள புலம்பெயர் தொழிலாளர்களை அவர்களின் சொந்த ஊர்களுக்குச் செல்ல பல்வேறு உதவிகளை தனது சொந்த செலவில் செய்து வருகிறார்.

மேலும் அவர் கொரோனாவால் வேலை இழந்து பாதிக்கப்பட்ட புலம்பெயர் தொழிலாளர்களை தங்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தார். இதில் தமிழகத்தைச் சேர்ந்த 200 தொழிலாளர்களும் அடக்கம். அத்துடன் கேரளாவில் பணிக்குச் சென்ற ஒடிசாவைச் சேர்ந்த 169 பெண்களை விமானத்தில் சொந்த மாநிலம் திரும்ப உதவினார்.

இப்படி தொடர்ந்து மக்களின் பாதுகாப்பில் அக்கறை எடுத்து கடந்த மூன்று மாதங்களாகவே உதவி செய்துவரும் நடிகர் சோனு சூட் அவரக்ளை மக்கள் கடவுளாக வழிபட்டுள்ளனர்.  பெரிய பேனர் வைத்து கொரோனா வைரஸை எதிர்த்து போரிடும் மன்னர் என்று சோனு சூட்டுக்கு புகழாரம் சூட்டி பூஜை செய்து வழிபட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதற்கு சோனு சூட் உங்கள் அன்பிற்கு நன்றி இருந்தாலும் என்னைக் கடவுளாக பார்க்க வேண்டாம் என மாக்கள் மனங்களில் இடம்பெற்றுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்