'காலா' படத்திற்கு வெளிநாட்டிலும் தடையா?

Webdunia
சனி, 2 ஜூன் 2018 (19:30 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'காலா' திரைப்படம் ஜூன் 7ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் இந்த படம் கர்நாடகாவில் தடை செய்யப்பட்டுள்ளதால் அங்கு வெளியாக வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் இந்த படத்தின் வசூல் சுமார் ரூ.20 கோடி வரை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
மேலும் சமீபத்தில் ரஜினிகாந்த் போராட்டம் குறித்து கூறிய சர்ச்சை கருத்து காரணமாக தமிழகத்தில் இந்த படம் வெளியாகும் திரையரங்குகள் முன் ஒருசில அமைப்புகள் போராட்டம் நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த நிலையில் தற்போது இந்த படம் வெளிநாட்டில் வெளியாவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
 
'காலா' திரைப்படத்தை நார்வே மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய இரண்டு நாடுகளிலும் வெளியிட தடை செய்திருப்பதாக செய்திகள் கசிந்து வருகிறது. ஆனாலும் இந்த தகவல் உறுதி செய்யப்படவில்லை.
 
'காலா' படத்திற்கு எத்தனை தடைகள் வந்தாலும், படமே ரிலீஸ் ஆகவில்லை என்றாலும் தயாரிப்பாளர் தனுஷூக்கு ஒரு பைசா கூட நஷ்டமில்லையாம். ஏனெனில் இந்த படத்தை அவர் லைக்கா நிறுவனத்திற்கு ஒரு பெரிய தொகைக்கு விற்றுவிட்டார். எனவே நஷ்டம் வந்தால் அது லைக்கா நிறுவனத்திற்குத்தான். ஆனால் 'காலா' பட வியாபாரத்தில் கிடைக்கும் தொகை லைக்காவுக்கு ஒருநாள் கிடைக்கும் வருமானம் என்பதால் இந்த படத்தால் யாருக்குமே நஷ்டம் இல்லை என்பதுதான் உண்மை என்று கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்