இந்நிலையில் கடந்த மாதம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் பெவர்லி ஹில்ஸ் பகுதியில் நடந்த இந்த நிகழ்ச்சியில் கிறிஸ்டோபர் நோலனின் ஓப்பன்ஹெய்மர் திரைப்படம் அதிக விருதுகளைப் பெற்றது. சிறந்த படம், சிறந்த இயக்குனர், சிறந்த நடிகர் (சில்லியன் மர்பி), சிறந்த நடிகை (லிலி கிளாட்ஸ்டோன்), சிறந்த குணச்சித்திர நடிகர் (ராபர்ட் டௌனி ஜூனியர்) மற்றும் சிறந்த பின்னணி இசை (லுட்விக் யோரன்சன்) ஆகிய ஆறு பிரிவுகளில் விருதுகளை பெற்றது.
இந்நிலையில் இங்கிலாந்து திரையுலகின் முன்னணி விருது விழாவான பாஃப்டா திரைப்பட விருதுகள் விழாவில் 7 விருதுகளைக் குவித்துள்ளது. சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குனர், சிறந்த நடிகர், சிறந்த துணை நடிகர், சிறந்த துணை நடிகர், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த எடிட்டிங் மற்றும் சிறந்த பின்னணி இசை ஆகிய பிரிவுகளில் விருதுகளை வென்றுள்ளது.