’’வேண்டாம் தல ரிஸ்க்’’ ... ’’வலிமை ’’ அஜித்-ன் கையில் தழும்பு.... துடிதுடித்த ரசிகர்கள்!!

Webdunia
வியாழன், 29 அக்டோபர் 2020 (16:39 IST)
நடிகர் அஜித் நேர்கொண்ட கொண்ட பார்வை என்ற படத்தின் வெற்றிக்குப் பின், ஹெச்.வினோத் இயக்கத்தில்  வலிமை என்ற படத்தில் நடித்து வருகிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். நிரவ் ஷா ஒளிபதிவு செய்கிறார்.

இப்படத்தையும் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார். கொரொனா கால ஊரடங்கிற்குப் பிறகு வலிமை படப்பிடிப்பு சமீபத்தில் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில்  தொடங்கியுள்ளதால் படக்குழு உற்சாகமாகியுள்ளது.

அங்கு புதிய ஸ்லிம் தோற்றத்தில் அஜித் தனது ரசிகர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில் அஜித்தின் கையில் தழுப்பு உள்ளதால் அதைப் பார்த்த ரசிகர்கள் தல ரிஸ்க் எடுக்க வேண்டாம் என அறிவுறுத்தி உள்ளனர். இன்று வலிமை என்ர பெயரில் ஹேஸ்டேக் உருவாக்கி அஜித் ரசிகர்கள் இந்திய அளவில் டிரெண்டிங் செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்