டபுள் சம்பளம் வாங்கிய சமந்தா... பேமிலி மேன் தொடரில் நடிக்க இத்தனை கோடியா!

Webdunia
வெள்ளி, 11 ஜூன் 2021 (12:03 IST)
சமந்தா நடிப்பில் உருவாகியுள தி ஃபேமிலிமேன்- 2 பெரும் சர்ச்சை ஏற்படுத்திய நிலையில் ஜூன் 4ம் தேதி அமேசான் பிரைமில் ரிலீஸானது. இதில் மனோஜ் பாஜ்பாய், சமந்தா, பிரியாமணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
 
’தி ஃபேமிலிமேன் 2’ தொடர் ஈழத்தமிழர்கள் தமிழக தமிழர்களின் உணர்வுகளை பெருமளவு புண்படுத்தி உள்ளது அதனால் இதைத் தடைசெய்ய வேண்டுமென சீமான் வைகோ உள்ளிட்டோர் மத்திய அரசை வலியுறுத்தினர். இத்தொடரில் பிரதான கேரக்டரில் நடித்துள்ள சமந்தாவுக்கு எதிர்ப்புகள் குவிந்தது.
 
ஈழத்தமிழர்கள் தமிழக தமிழர்களின் உணர்வுகளை இந்த தொடர் பெருமளவு புண்படுத்தி உள்ளது என்று தமிழக அரசு மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரருக்கு கடிதம் எழுதியது. ஈழத் தமிழர்களைத் தவறாக சித்தரித்துள்ளதாக பெரும் எதிர்ப்புகள் உருவான நிலையில் இந்த தொடர் வெளியாகிய பிறகு நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. 
 
இதில் சமந்தாவின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த தொடரில் நடிக்க சமந்தா டபுள் சம்பளம் பெற்றுள்ளார். அதாவது வழக்கமாக 1.5 கோடி முதல் 2 கோடி ரூபாய் சம்பளமாக வாங்கும் சமந்தா இந்த தொடருக்கு ரூ. 4 கோடி சம்பளம் வாங்கிக்கொண்டு நடித்ததாக தகவல்கள் கசிந்துள்ளது. 4 கோடி என்ன சமந்தா நடிப்பு 10 கோடி கொடுக்கலாம் என்கிறது ரசிகர்கள் வட்டாரம். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்