தளபதி 67 படத்தில் நான் இல்லை… மறுத்த மலையாள நடிகர்!

Webdunia
திங்கள், 31 அக்டோபர் 2022 (09:59 IST)
விஜய் நடிக்கும் அடுத்த படத்தில் நிவின் பாலி வில்லனாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

நடிகர் விஜய் தற்போது நடித்துவரும் வாரிசு திரைப்படம் இன்னும் சில தினங்களில் முழுவதும் நிறைவடையும் என சொல்லப்படுகிறது. இதை முடித்துவிட்டு அவர் உடனடியாக லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தை தொடங்க உள்ளார். இந்த படத்தில் சஞ்சய் தத் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த படத்தில் முதலில் வில்லனாக நடிக்க பிருத்விராஜிடம் ஒப்புக்கொண்டதாக சொல்லப்பட்டது. ஆனால் இப்போது அவர் அந்த படத்தில் இருந்து வெளியேறி விட்டதாகவும், அந்த கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் விஷாலிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில் மலையாள நடிகர் நிவின் பாலி வில்லனாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அதை நிவின் பாலி தரப்பு மறுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்