இது குறித்து நித்திய மேனன் கூறியதாவது, எழுத்தாளரின் எழுத்துரிமையை மையமாக வைத்து இக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. கெளரி லங்கேஷ் பாணியிலான கதை என்றாலும் கௌரி லங்கேஷ் கொல்லப்படுவதற்கு 4 மாதத்துக்கு முன்பே இப்படத்தின் பணிகள் தொடங்கிவிட்டன. அந்த சம்பவத்துக்கும் இந்த கதைக்கும் தொடர்பு இல்லை.
மேலும், பிராணா படம் 4 மொழிகளில் உருவாகிறது. ஒவ்வொரு மொழியிலும் தனித்தனியாக 4 முறை நடிக்க வேண்டி இருப்பதால் மிகுந்த சிரமத்தை தாங்கிக்கொள்ள வேண்டி இருக்கிறது. ஆனாலும் புது அனுபவமாக உள்ளது என தெரிவித்துள்ளார்.