'விவேகம்' படத்தின் புதிய போஸ்டர்: அஜித் ரசிகர்கள் ஆரவாரம்

Webdunia
வியாழன், 20 ஜூலை 2017 (05:08 IST)
தல அஜித் நடித்து முடித்துள்ள 'விவேகம்' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் ஏற்கனவே வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற நிலையில் இன்று அதிகாலை இந்த படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது.



 
 
இந்த போஸ்டரில் முதன்முதலாக அஜித்துடன் காஜல் அகர்வால், அக்சராஹாசன், மற்றும் விவேக் ஓபராய் ஆகியோர் காணப்படுகின்றனர். இந்த போஸ்டர் வெளியான வினாடி முதல் தற்போது வரை டுவிட்டரில் டிரெண்ட் ஆகி வருவதால் அஜித் ரசிகர்கள் டுவிட்டரில் ஆரவாரம் செய்து வருவதாக தெரிகிறது.
 
வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளிவரவுள்ள இந்த படத்தில் அஜித், காஜல் அகர்வால், அக்சராஹாசன், விவேக்  ஓபராய் உள்பட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் ரூ.100 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் தயாரித்துள்ளது.
அடுத்த கட்டுரையில்