பல்க்கா லாபம் பார்த்த விக்னேஷ் சிவன்… நெற்றிக்கண் பிஸ்னஸ் இவ்வளவா?

Webdunia
புதன், 16 ஜூன் 2021 (16:05 IST)
நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள நெற்றிக்கண் திரைப்படம் ஓடிடியில் வெளியாக உள்ளது.

நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் படங்களில் நெற்றிக்கண்ணும் ஒன்று. இந்த படத்தை அவரது வருங்கால கணவரான விக்னேஷ் சிவனின்  ரவுடி பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது. மிலிண்ட் ராவ் என்ற புதுமுக இயக்குனர் கதை, வசனம், எழுதி, இயக்க உள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கி  முடிந்து விட்டது. ரிலிஸுக்கு தயாரான நிலையில் கொரோனா இரண்டாவது அலை பரவல் மிக அதிகமாக இருப்பதால் திரையரங்குகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் இந்த படத்தை ஓடிடிக்குக் கொண்டு செல்ல முடிவு செய்துள்ளது நெற்றிக்கண் படக்குழு. இது சம்மந்தமாக படத்தின் தயாரிப்பாளர் விக்னேஷ் சிவன் பேச்சுவார்த்தை நடத்தி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் ஜூலை 9 ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் இந்த படத்தை வெறும் 5 கோடியில் உருவாக்கி (நயன்தாரா சம்பளம் இல்லாமல்) 20 கோடி வரை வியாபாரம் செய்து பெரும்தொகையை லாபம் பார்த்துள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்