”சாக்கடையில் இறங்கும் முதல் ஆளாக இருப்பேன்”… கவனம் ஈர்த்த நெஞ்சுக்கு நீதி டிரைலர்!

Webdunia
செவ்வாய், 10 மே 2022 (09:43 IST)
உதயநிதி ஸ்டாலின் நடித்த நெஞ்சுக்கு நீதி என்ற திரைப்படம் ரிலீசுக்கு தயாராக இருக்கும் நிலையில் இந்த படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியாகி கவனம் பெற்றுள்ளன.

உதயநிதி ஸ்டாலின் நடித்த நெஞ்சுக்கு நீதி என்ற திரைப்படம் ரிலீசுக்கு தயாராக இருக்கும் நிலையில் இந்த படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் நாளை மாலை ஆறு முப்பது மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த படம் சென்சார் செய்யப்பட்டு ‘UA’ சான்றிதழ் பெற்று உள்ள நிலையில் மே 20 ஆம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆகிறது.

இந்நிலையில் நேற்று இந்த படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. அதையடுத்து இணையத்தில் டிரைலர் வெளியான நிலையில் பரவலான கவனத்தைப் பெற்றுள்ளது. சமீபத்தைய அரசியல் சர்ச்சைகளில் ஒன்றான முருகனின் வேல் யாத்திரை உள்ளிட்ட காட்சிகள் எல்லாம் டிரைலரில் இருப்பதால் படத்தின் மீதான ஆர்வம் அதிகமாகியுள்ளது. 


தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்