நெஞ்சுக்கு நீதி ரிலீஸ் தேதி அறிவிப்பு… வைரலாகும் போஸ்டர்!

சனி, 16 ஏப்ரல் 2022 (18:49 IST)
நெஞ்சுக்கு நீதி என்ற படத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்து வருகிறார். இந்த படம் இந்தியில் வெற்றி பெற்ற ஆர்ட்டிகிள் 15 படத்தின் ரீமேக் ஆகும்.

நடிகரும் தயாரிப்பாளருமான உதயநிதி, அருண்ராஜா காமராஜ் இயக்கி வரும் நெஞ்சுக்கு நீதி படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை ஆகிய படங்களின் தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் இப்போது மொத்தமாக படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக சொல்லப்படுகிறது. விரைவில் ரிலிஸுக்கான பணிகள் தொடங்க உள்ளன.

உதயநிதி சட்டமன்ற உறுப்பினராக ஆனதற்குப் பின்னர் வெளியாக உள்ள முதல் திரைப்படம் என்பதால் இதன் மீது பெரும் நம்பிக்கையில் இருக்கிறாராம். இந்நிலையில் படத்தின் பெரும்பாலான வேலைகள் முடிந்துவிட்ட நிலையில் விரைவில் வெளியாகும் என சொல்லப்பட்டு வந்தது. இந்நிலையில் மே 20 ஆம் தேதி இந்த படம் ரிலீஸாகும் என அதிகாரப்பூர்வமாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்