பீஸ்ட் படத்தில் மிஷ்கின்? அடுத்தடுத்து வெளியாகும் அப்டேட்ஸ்!

வெள்ளி, 13 ஆகஸ்ட் 2021 (17:00 IST)
நடிகர் விஜய் நடிப்பில் உருவாகும் பீஸ்ட் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க மிஷ்கின்தான் இயக்குனரின் தேர்வாக இருந்தாராம்.

நடிகர் விஜய் நடிப்பில் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகிவரும் படம் பீஸ்ட். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா கெஹ்டே நடித்து வருகிறார். இந்நிலையில், இப்படத்தை பிரமாண்டமான முறையில் சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படத்தைப் பற்றிய தகவல்கள் தினமும் வெளியாகிக் கொண்டு உள்ளன. அதை முன்னிட்டு இப்போது படத்தில் மூன்று வில்லன்களாக செல்வராகவன், ஷைன் டாம் சாக்கோ மற்றும் டான்ஸிங் ரோஸ் புகழ் ஷபீர் ஆகியோர் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இயக்குனர் நெல்சன் செல்வராகவன் நடிக்கும் கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க இயக்குனர் மிஷ்கினைதான் மனதில் வைத்திருந்தாராம். அது மட்டுமில்லாமல் மிஷ்கினை சந்தித்து படத்தில் நடிக்கவும் கேட்டாராம். ஆனால் மிஷ்கின் பிசாசு 2 படத்தில் பிஸியாக இருப்பதால் தன்னால் நடிக்க முடியாது எனக் கூறிவிட்டாராம். அதன் பின்னர்தான் செல்வராகவன் தேர்வு செய்யப்பட்டு நடித்து வருகிறாராம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்