சிம்புவின் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் இணைந்த பிரபல மலையாள நடிகர்!

Webdunia
ஞாயிறு, 14 நவம்பர் 2021 (11:04 IST)
சிம்பு நடிப்பில் கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் ’வெந்து தணிந்தது காடு’ என்ற படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பாக சமீபத்தில் இந்த படத்தின் முக்கிய காட்சிகள் மும்பையில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இந்த வழக்கில் பிரபல மலையாள நடிகர் ஒருவரை இணைந்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளது. இந்த படத்தில் நீரவ் மாதவ் என்பவர் முக்கிய கேரக்டரில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாகவும் அவருடைய கேரக்டர் இந்த படத்தின் திருப்புமுனையாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது
 
ஏஆர் ரகுமான் இசையில் ஐசரி கணேஷின் வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்துக்கு எழுத்தாளர் ஜெயமோகன் வசனம் எழுதி வருகிறார். கவிஞர் தாமரை பாடல் வரிகளில், சித்தார்த்தா நுனி என்பவரின் ஒளிப்பதிவில், அந்தோணி படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்