’’அவசியம் தடுப்பூசி போட்டுக்குங்க’’- சூரி டுவீட்

Webdunia
செவ்வாய், 25 மே 2021 (22:00 IST)
கொரொனா தடுப்பூசி போட்டுக்கொண்ட பின் 6 நாட்களாயிற்று எனக்கு உடல் வலியும் லேசான சோர்வும் இருப்பதாகத் தெரிவித்துள்ளார் நடிகர் சூரி.

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது என்பதும் இன்று தமிழகத்தில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

தமிழகத்தில் கொரொனா தொற்றில் இருந்து மக்களைப் பாதுகாக்க தளர்வுகளற்ற ஊரடங்கு அமல்படுத்தியுள்ளது.

இந்தநிலையில் கொரோனாவில் இருந்து மக்கள் தங்களை தற்காத்துக்கொள்ள தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என மாநில அரசு வலியுறுத்தி வருகிறது. அந்த வகையில் திரையுலக பிரபலங்கள் பலர் தாங்கள் தடுப்பூசி போட்டுக் கொண்ட புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் காமெடி நடிகர் சூரி சமீபத்தில் தனது மனைவியுடன் சென்று தடுப்பூசி போட்டுக்கொண்டார்.  

இந்நிலையில் தடுப்பூசி போட்டுக்கொண்டது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது: நானும் என் மனைவியும் கொரோனா தடுப்பூசிபோட்டு ஆறு நாளாச்சு; எனக்கு மட்டும் இரண்டு நாள் உடல்சோர்வும், ஊசி குத்தின இடத்துல வலியும் இருந்துச்சு,இப்ப நானும் நார்மலாகிட்டேன். எல்லாரும் அவசியம் தடுப்பூசி போட்டுக்குங்க- உங்களுக்காக, உங்க குடும்பத்துக்காக, நாட்டுக்காக! எனத் தெரிவித்துள்ளார்.
#GetVaccinated .

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்