அவங்க நார்மல் பீப்பிள் கிடையாது! ஒரு மாசமா விரதம்! மூக்குத்தி அம்மன் 2 பூஜைக்கு வராத நயன்தாரா??

Prasanth Karthick
வியாழன், 6 மார்ச் 2025 (10:51 IST)

நயன்தாரா நடிப்பில் சுந்தர்.சி இயக்கத்தில் உருவாக உள்ள மூக்குத்தி அம்மன் 2 படத்தின் தொடக்க பூஜை இன்று பிரம்மாண்டமாக நடைபெறுகிறது.

 

ஆர்.ஜே.பாலாஜி இயக்கி நடித்த மூக்குத்தி அம்மன் படத்தில் அம்மனாக நயன்தாரா நடித்தார். அந்த படம் பெரும் ஹிட் ஆன நிலையில் அதன் இரண்டாம் பாகத்தை வேல்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க சுந்தர்.சி இயக்குகிறார். இதில் நயன்தாராவே அம்மனாக நடிக்கிறார். முழுவதும் நயன்தாராவை மையப்படுத்தி உருவாகும் இந்த படம் 100 கோடி பட்ஜெட்டில் உருவாகிறது. தமிழ் சினிமாவில் பெண் மையக்கதை கொண்ட படம் 100 கோடி பட்ஜெட்டில் உருவாவது இதுவே முதல்முறை என கூறப்படுகிறது.

 

இந்நிலையில் இன்று மூக்குத்தி அம்மன் 2 படத்திற்கான பூஜை சென்னை பிரசாத் ஸ்டுடியோவில் நிஜமான கோவில் போன்றே செட் அமைக்கப்பட்டு பிரம்மாண்டமாக நடைபெறுகிறது. இந்த படபூஜை நிகழ்ச்சிக்கு இயக்குனர் சுந்தர்.சி. தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், மற்றும் சக நடிகர்கள் என பலரும் வந்துவிட்ட நிலையில் நயன்தாரா இன்னும் நிகழ்ச்சிக்கு வரவில்லை.

 

இதுகுறித்து பேசிய தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் “மூக்குத்தி அம்மன் முதல் பாகம் தயாரானபோதே நயன்தாரா ஒரு மாதம் விரதம் இருந்து அதன் பின் நடித்தார். தற்போது இரண்டாம் பாகத்திற்காக கடந்த ஒரு மாத காலமாக அவரது குடும்பமே விரதம் இருக்கிறார்கள். நயன்தாரா தற்போது வந்துக் கொண்டிருக்கிறார். சற்று தாமதமாகலாம்” என கூறியுள்ளார்.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்