நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணமா?

திங்கள், 27 செப்டம்பர் 2021 (15:52 IST)
இயக்குநர் விக்னேஷ் – நயன்தாரா இருவரும் காதலர்கள் என்பது அனைவருக்கும் தெரியும். இந்நிலையில், இருவரும் திருமணம் செய்து கொண்டனரா? என இணையதளத்தில் ஒரு தகவல் பரவி வருகிறது.

இந்நிலையில் காதலன் விக்னேஷ் சிவனுடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அப்போது ரங்கநாயக மண்டபத்தில்தேவஸ்தான அதிகாரிகள் அவர்களுக்கு பிரசாதங்கள் வழங்கினர். அங்கிருந்த ரசிகர்கள் நயன்தாரவை பார்த்ததும் ஓடிவந்து செல்பி எடுத்துக்கொண்டனர்.

இந்நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்த இயக்குநர் விக்னேஷ் சிவன் -நயன்தாரா ஜோடி இருவரும் திருமணம் செய்து கொண்டார்களா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்