விஜய் சேதுபதி- நயன்தாரா பட 2 வது சிங்கில் ரிலீஸ்

சனி, 18 செப்டம்பர் 2021 (15:59 IST)
விஜய் சேதுபதி – நயன்தாரா நடிப்பில் உருவாகிவரும் ’காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தின் 2 வது சிங்கில் பாடல் ரிலீஸாகியுள்ளது.

விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா ஆகிய இருவரும் ஏற்கனவே ’நானும் ரவுடிதான்’ ‘இமைக்கா நொடிகள்” ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ள நிலையில் தற்போது மூன்றாவது முறையாக ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்ற படத்தில் நடிக்க உள்ளனர் .

இந்த படத்தில் நடிகை சமந்தாவும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டு விட்ட நிலையில்
விரைவில் இப்படத்தின் போஸ்ட் புரொடெக்சன் பணிகள் நடைபெறும் எனக் கூறப்பட்டது.

இந்நிலையில், காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் 2 வது சிங்கில்
#TwoTwoTwo -மதியம் 2:22 மணிக்கு ரிலீஸாகும் எனக் கூறிய நிலையில் இப்பாடல் தற்போது ரிலீஸாகியுள்ளது.  அனிருத் இசையமைத்துள்ள இப்பாடல் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.  

Here we go! #TwoTwoTwo from #KaathuvaakulaRenduKaadhal - https://t.co/vbJAMAJJTr

Happy Birthday dear @VigneshShivN

Thank you @SunidhiChauhan5 and @SanjanaKalmanje for your energy :) @VijaySethuOffl #Nayanthara @Samanthaprabhu2 @srkathiir #Anirudh25 #HBDVigneshShivan pic.twitter.com/al3DEqu0eu

— Anirudh Ravichander (@anirudhofficial) September 18, 2021

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்