முருகதாஸ் படத்தில் நயன்தாரா நடிக்கவில்லை

Webdunia
திங்கள், 19 செப்டம்பர் 2016 (12:54 IST)
மகேஷ்பாபுவை வைத்து முருகதாஸ் இருமொழிகளில் இயக்கிவரும் படத்தில் நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டதாக வந்த செய்தியை முருகதாஸ் மறுத்துள்ளார்.

 
இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தில் நாயகியாக ராகுல் ப்ரீத் சிங் ஒப்பந்தம் செய்யப்பட்டார். முக்கியமான வேடத்தில் நயன்தாராவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடப்பதாக கூறப்பட்டது. அதனை தனது ட்விட்டர் பக்கத்தில் முருகதாஸ் மறுத்துள்ளார்.
 
இந்தப் படத்தில் ஆர்.ஜே.பாலாஜி, எஸ்.ஜே.சூர்யா ஆகியோரும் இந்தப் படத்தில் நடித்து வருகின்றனர்.
அடுத்த கட்டுரையில்