சூப்பர் ஸ்டார் படத்திற்குப் பின்.... நயன்தாரா எடுத்த முடிவு..

Webdunia
செவ்வாய், 18 மே 2021 (18:40 IST)
முன்னணி நடிகை நயன்தாரா நடிப்பில் ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் கடந்தாண்டு வெளியான பக்திப் படம் மூக்குத்தி அம்மன். இப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் தற்போது, ரஜினியுடன் அண்ணாத்த, விஜய் சேதுபதியுடன் காத்து வாக்குல ரெண்டு காதல் என்ற படத்தில் நடித்துவருகிறார் நயன்தாரா. இப்படத்தில் நயன்தாராவுடன் சமந்தாவும் முக்கிய கேரக்டரில் நடிக்கவுள்ளார்.

நயன்தாரா நடிப்பில் வெளியான அறம், கோலமாவு கோகிலா, இமைக்கா நொடிகள் , டோரா போன்ற படங்கள் பெறும் வெற்றி பெற்றன. ஏற்கனவே கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து அதில் வெற்றி பெற்ற நயன்தாரா, மீண்டும் அதேபோன்ற நடிக்கவும் ஆர்வமுடன் உள்ளதாகக் கூறப்படுகிறது.

அண்ணாத்தா, காத்து வாக்குல ரெண்டு காதல் , தன் காதலர் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நெற்றிக்கண் ஆகிய படங்களுக்குப் பிறகு நயன்தரா மீண்டும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிக்க கதை கேட்டுவருவதாகத் தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்