தமிழ் சினிமாவில் தோனி… முதல் சாய்ஸ் விஜய்யா? வெளியான சீக்ரெட்!

Webdunia
வியாழன், 12 மே 2022 (08:57 IST)
தோனி தமிழில் படங்களை அடுத்தடுத்து தயாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, தற்போது ஐபிஎல் போட்டிகளில் மட்டும் விளையாடி வருகிறார். இந்த ஆண்டு அவர் தலைமையில் விளையாடும் சி எஸ் கே அணி மோசமான தோல்விகளை பெற்று, ப்ளே ஆஃப் செல்லும் வாய்ப்பை கிட்டத்தட்ட இழந்துவிட்டது.

இந்நிலையில் தோனி கிரிக்கெட் ஓய்வுக்கு பின் திரைப்பட தயாரிப்பில் இறங்க உள்ளதாக சொல்லப்படுகிறது. அவரின் முதல் படத் தயாரிப்பில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. சமீபத்தில் அவர் நடித்த சி எஸ் கே விளம்பர படத்தை நயன்தாராவின் காதலர் விக்னேஷ் சிவன் இயக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சென்னையில் அலுவலகம் போட்டு பிஸியாக வேலைகளை செய்துவருகிறது தோனியின் நிறுவனம். இதற்கிடையில் தோனி தனது முதல்படத்தை விஜய்யை வைத்துதான் தயாரிக்க முடிவு செய்திருந்தாராம். ஆனால் விஜய் அடுத்தடுத்து சில படங்களை ஏற்கனவே கமிட் செய்துவிட்டதால் எதிர்காலத்தில் ஒரு படம் பண்ணலாம் என சொல்லிவிட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் தோனியின் முதல் தயாரிப்பு லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை வைத்து தொடங்க உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்