மிக்சர் காமெடியில் நடித்த நடிகையா இவர்? வைரலாகும் புகைப்படம்!

Webdunia
செவ்வாய், 29 செப்டம்பர் 2020 (15:42 IST)
நாட்டாமை படத்தில் இடம்பெற்ற புகழ்பெற்ற மிக்சர் காமெடியில் கவுண்டமணி பார்க்க சென்ற பெண்ணாக நடித்த நடிகை இப்போது தொலைக்காட்சி சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கிறாராம்.

சரத்குமா, மீனா, குஷ்பு , கவுண்டமணி மற்றும் செந்தில் காம்பினேஷனில் உருவான திரைப்படம் நாட்டாமை. இந்த திரைப்படத்தை இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் இயக்கி இருந்தார். சூப்பர் ஹிட்டான இந்த திரைப்படத்தில் பிரபலமான மிக்சர் காமெடியை தெரியாத நபர்களே இருக்க முடியாது. சமூகவலைதளங்களில் ஒரு மீம் டெம்ப்ளேட்டாகவே அந்த நகைச்சுவை காட்சி உள்ளது.

இந்நிலையில் அந்த காட்சியில் கவுண்டமணி பார்க்க செல்லும் பெண்ணாக நடித்த நடிகையின் தற்போதைய புகைப்படம் வெளியாகியுள்ளது. கீர்த்தி நாயுடு என்ற தெலுங்கு நடிகையான அவர் இப்போது தெலுங்கில் சீரியல்களில் நடித்து வருகிறாராம். அவரது தற்போதைய புகைப்படம் இப்போது இணையத்தில் பரவி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்