பிக்பாஸ் வீட்டுக்கு செல்கிறேனா? நாசர் மகன் விளக்கம்!

செவ்வாய், 22 செப்டம்பர் 2020 (16:06 IST)
நடிகர் நாசரின் மகன் அபிஹாசன் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்ற செய்தியை அவர் மறுத்துள்ளார்.

பிக்பாஸ் சீசன் நிகழ்ச்சியின் 3 சீசன்கள் முடிவடைந்து தற்போது நான்காவது சீசன் விரைவில் தொடங்க இருக்கிறது. இது குறித்த முதல் புரோமோவை நடிகர் கமலஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டதை அடுத்து பிக்பாஸ் நான்காவது சீசன் உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த முறை போட்டியாளர்கள் யார் என்பதில் ரசிகர்கள் இடையே ஆர்வம் அதிகமாகி உள்ளது.

போட்டியாளர்களில் ஒருவராக நடிகர் நாசரின் மகன் அபிஹாசன் செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அவ்வாறு தான் செல்லவில்லை என அவர் தனது சமூகவலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்