திருச்செந்தூர் கடலில் ஒவ்வொரு மாதமும் பெளர்ணமி, அம்மாவாசை ஆகிய நாட்களில் மட்டும் கடல் நீட் மட்டம் குறைந்திருக்கும்.
இந்த நிலையில், திருச்செந்தூர் சுவாமி திருக்கோவில் கடற்கரையில் அஷ்டமி நாளான இன்றைய தினம். கடல் நீர் மட்டம் குறைந்து காட்சியளித்தது. அப்போது, கடற்கரையில் நந்தி சிலைகள் வெளியே தெரிந்ததால், மக்கள் இதை ஆர்வத்துடன் பார்த்துச் சென்றனர்.
இந்தச் சிலைகள் அனைத்தையும் பாதுக்காக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்களும், சிலை பாதுகாவர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்த புகைப்படங்களும்,வீடியோக்களும் வைரலாகி வருகிறது.