பெயர் மாற்றப்பட்ட ரஜினி ரசிகர் மன்றம்

சனி, 6 ஜனவரி 2018 (11:58 IST)
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார் என அவரது ரசிகர்கள் காந்திருந்து, காத்திருந்து 20 வருடங்களுக்கு பின்னர் 2017  டிசம்பர் 31-ம் தேதி, 'அரசியலில் தீவிரமாக இறங்குவேன்' என்று அறிவித்தார். பின்னர், ஜனவரி 4-ம் தேதி பாபா முத்திரைகொண்ட ரஜினி பேரவைக்கான மொபைல் அப்ளிகேஷனை வெளியிட்டார்.
வரும் சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிடுவேன் என அறிவித்து அரசியல் களத்தில் இறங்கியுள்ளார். இந்நிலையில் பாபா சின்னத்தைப் பலர் சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்தனர். பாபா முத்திரையில் தாமரை மலர்  இடம்பெற்றதால், ரஜினிகாந்த் பா.ஜ.க-வை மறைமுகமாக ஆதரிக்கிறார் என்று கூறப்பட்டது. இதையடுத்து, பாபா முத்திரையில்  இருந்த தாமரை நீக்கப்பட்டது. முத்திரையின் கீழ் உண்மை, உழைப்பு, உயர்வு என்கிற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. 
 
ரஜினிகாந்த் தொடங்கவிருக்கும் அரசியல் கட்சியின் பெயர், கொடி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், கட்சிக்கு உறுப்பினர்களைச் சேர்க்கும் பணியில் தீவிரம்காட்டிவருகிறார் ரஜினி. www.rajinimandram.org என்ற தனி இணையதளம்  தொடங்கி, ரசிகர்களும் பொது மக்களும் உறுப்பினராகச் சேரும்படி அழைப்பு விடுத்துள்ளார். 
 
இந்நிலையில் தற்போது, ரஜினி ரசிகர் மன்றம் என்பது, 'ரஜினி மக்கள் மன்றம்' எனப் பெயர் மாற்றப்பட்டுள்ளது குறிப்படத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்