ஆயிரம் ஏக்கர் வனத்தை தத்தெடுத்த நாகர்ஜூனா! – இயற்கை ஆர்வலர்கள் பாராட்டு!

Webdunia
வெள்ளி, 18 பிப்ரவரி 2022 (11:41 IST)
வனப்பகுதிகளை காக்கும் நோக்கில் ஆயிரம் ஏக்கர் வனப்பகுதியை தத்தெடுத்துள்ளார் நடிகர் நாகர்ஜூனா.

தெலுங்கில் பிரபலமான நடிகராக இருந்து வருபவர் நாகர்ஜூனா. இவரது மகன்களும் தற்போது சினிமா நடிகர்களாக இருந்து வருகின்றனர். சினிமா தாண்டி பொதுசேவையிலும் அக்கினேனி குடும்பத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.

தெலுங்கானாவில் இயற்கையை காக்கும் நோக்கி காடுகளை அதிகரிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன, இந்நிலையில் நடிகர் நாகர்ஜூனா தனது அக்கினேனி குடும்பத்தின் சார்பில் ஆயிரம் ஏக்கர் வனப்பகுதியை தத்தெடுத்துள்ளார். ஏற்கனவே உள்ள மரங்களை பராமரிப்பது மற்றும் புதிய மரங்களை நட்டு வளர்ப்பது உள்ளிட்ட பணிகளுக்காக 2 கோடியை தனது குடும்பத்தின் சார்பில் வழங்கியுள்ளார் நாகர்ஜூனா. அவரது இந்த செயலை இயற்கை ஆர்வலர்கள் பாராட்டியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்