சமந்தாவுடன் நடித்த படத்தை நினைவு கூர்ந்த நாக சைதன்யா!

Webdunia
திங்கள், 23 மே 2022 (19:08 IST)
நடிகை சமந்தா மற்றும் நடிகர் நாக சைதன்யா சமீபத்தில் விவாகரத்து பெற்று பிரிந்து விட்ட நிலையில் எட்டு ஆண்டுகளுக்கு முன் சமந்தா உடன் நடித்த மனம் திரைப்படம் குறித்து நடிகர் நாகசைதன்யா நினைவு கூர்ந்துள்ளார் 
 
நாகேஸ்வர ராவ், நாகார்ஜுனா மற்றும் நாக சைதன்யா ஆகிய மூன்று தலைமுறை நடிகர்கள் நடித்த திரைப்படம் மனம், இந்த படத்தில் நாயகியாக சமந்தா நடித்திருந்தார் 
இந்த படம் ரிலீஸ் ஆகி எட்டு ஆண்டுகள் ஆனதை அடுத்து இது குறித்து தனது மகிழ்ச்சியை பகிர்ந்து உள்ள நாக சைதன்யா இந்த படம் தனது வாழ்வில் மறக்க முடியாத படம் என்று தெரிவித்திருந்தார் 
 
இந்த படத்தின் இயக்குனர் விக்ரம் குமார் இயக்கத்தில் மீண்டும் ஒரு படத்தில் நாக சைதன்யா நடித்து வருகிறார் என்பதும் அந்த படத்தின் டைட்டில் தேங்க்யூ என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்