தடுப்பூசி போட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நடிகை நதியா!

வெள்ளி, 20 ஆகஸ்ட் 2021 (16:34 IST)
நடிகை நதியா இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி போட்டும் இப்போது கொரோனா பாதிப்பால் பாதிக்கப்பட்டுள்ளார்.

நடிகை நதியா தமிழ் சினிமாவில் 80 களின் இறுதி மற்றும் 90 களின் தொடக்கத்தில் முன்னணி நடிகையாக விளங்கியவர். அதன் பின்னர் திருமணம் செய்துகொண்டு அமெரிக்காவில் செட்டில் ஆன அவர் மீண்டும் எம் குமரன் திரைப்படம் மூலமாக நடிக்க வந்தார். அம்மாவாகவும் ஒரு ரவுண்ட் வெற்றிகரமாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் இப்போது அவர் தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அனைவரும் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார். நதியா கடந்த சில மாதங்களுக்கு முன்னதாகவே இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்