நடிகர் யோகிபாபு தமிழில் இப்போது அதிக சம்பளம் வாங்கும் நகைச்சுவை நடிகராக இருக்கிறார். நகைச்சுவை நாயகனாகவும் சில படங்களில் படங்களில் நடித்து அந்த படங்கள் வெற்றியும் பெற்றன. கடைசியாக அவர் நடித்த மண்டேலா படம் ஓடிடியில் ரிலீஸாகி வெற்றி பெற்றது. அதுமட்டுமில்லாமல் அவரிடம் சேர்ந்தார் போல ஒரு 10 நாட்கள் கால்ஷீட் வாங்குவதே தயாரிப்பாளர்களுக்கு குதிரைக் கொம்பாக உள்ளது.