நானே வருவேன் ரிலீஸ் பற்றி வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு

வியாழன், 8 செப்டம்பர் 2022 (09:38 IST)
நடிகர் தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கியுள்ள நானே வருவேன் திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடல் ரிலீஸ் ஆகியுள்ளது.

தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகிவரும் நானே வருவேன் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது . இந்த படத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்துள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் படத்தின் கதையை தனுஷே எழுதியுள்ளதாக சொல்லப்படுகிறது. தற்போது நடிகராகி விட்ட செல்வராகவன் இந்த படத்திலும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான வீரா சூரா பாடல் நேற்று இணையத்தில் வெளியாகி கவனம் பெற்று வருகிறது. இது சம்மந்தமான போஸ்டரில் படம் செப்டம்பர் மாதம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் மாதம் வெளியான தனுஷின் திருச்சிற்றம்பலம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்