வடிவேலு + சந்தோஷ நாராயணன் + பிரபுதேவா காம்பினேஷனில் ’அப்பத்தா’ – நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் சிங்கிள் அப்டேட்!

Webdunia
திங்கள், 14 நவம்பர் 2022 (09:11 IST)
வடிவேலு நடிப்பில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் சுராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் ஷூட்டிங் மொத்தமாக நிறைவு பெற்றுள்ளது. இந்த படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் அமைத்துள்ளார் பிரபுதேவா. இந்த பாடலுக்காக சுமார் ஒன்றரை கோடி ரூபாய் வரை செலவு செய்யப்பட்டதாம்.

அப்பத்தா என்று தொடங்கும் இந்த பாடல் இன்றிரவு 7 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சந்தோஷ் நாராயணன் இசையில் இந்த பாடலை வடிவேலுவே பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நவம்பரிலேயே இந்த படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டனர். ஆனால் இப்போது டிசம்பர் இரண்டாவது வாரத்துக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. படத்தின் இறுதிப் பணிகள் முடிந்து படம் 2மணிநேரம் 20 நிமிடம் ஓடும் விதமாக எடிட் செய்யப்பட்டுள்ளதாகவும், விரைவில் சென்சார் செய்யப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்