இரண்டு பக்கத்தையும் பார்க்கவேண்டும்… தெருநாய்ப் பிரச்சனை குறித்து மிஷ்கின் கருத்து!

vinoth

வியாழன், 4 செப்டம்பர் 2025 (09:28 IST)
கடந்த சில மாதங்களாக சமூக வலைத்தளங்களில் அதிகம் விவாதிக்கப்படும் ஒரு தலைப்புகளில் ஒன்றாக தெரு நாய்களின் தாக்குதல் அமைந்துள்ளது. இது குறித்து பல்வேறு தரப்பினரும் தங்களது கருத்துக்களை முன்வைத்து வரும் நிலையில் சமீபத்தில் நடந்த ‘நீயா நானா’ நிகழ்ச்சி பெரியளவில் கவனம் ஈர்த்தது.

அதில் தெருநாய் ஆதரவாளர்கள் மற்றும் அதற்கு எதிரானவர்கள் என்ற பிரிவில் நடந்த உரையாடலில் தெருநாய்களுக்கு ஆதரவாகப் பேசவந்தவர்கள் உளறிக் கொட்டி கேலிக்குள்ளானார்கள். அதிலும் படவா கோபி மற்றும் அம்மு போன்ற சின்னத்திரை நடிகர்கள் அபத்தமாகப் பேசி ட்ரோல்களுக்கு ஆளானார்கள். அவர்களிடம் இருந்து ஆக்கப்பூர்வமான உரையாடல்கள் வரவேயில்லை என்பதுதான் நாய் ஆதரவாளர்களின் குரலாக உள்ளது.

இந்நிலையில் இயக்குனரும் நடிகருமான மிஷ்கின் இதுபற்றி தனது கருத்தைத் தெரிவித்துள்ளார். அதில் “மனிதர்களுக்குக் கருத்தடை செய்ததை போல நாய்களுக்கு செய்ய முடியவில்லை என்பதுதான் இந்த பிரச்சனைகளுக்குக் காரணம்.  உயிர்வதைக் கொடுமையானது. அதே நேரத்தில் நாய்களால் வரும் பிரச்சனைகளையும் பார்க்கவேண்டும். இந்த விஷயத்தில் இரண்டு பக்கங்களையும் பார்க்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்