நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'இட்லி கடை' திரைப்படத்தை, உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இன்பநிதி பெயரில் வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம், இன்பநிதி திரைப்பட தயாரிப்பு பணிகளிலும் ஈடுபட உள்ளதாக தெரிகிறது.
திரைப்பட விநியோகம் மற்றும் தயாரிப்பு என இரு துறைகளிலும் இன்பநிதி களமிறங்குவது, அரசியல் மற்றும் சினிமா வட்டாரங்களில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வாக பார்க்கப்படுகிறது. 'இட்லி கடை' படத்தின் விநியோக உரிமையை பெற்ற ரெட் ஜெயன்ட் மூவிஸ், வழக்கமாக உதயநிதி ஸ்டாலின் பெயரில் வெளியிடும் படங்களை, முதன்முறையாக இன்பநிதி பெயரில் வெளியிடுகிறது.
இந்த அறிவிப்பு, திரையுலகிலும், அரசியல் அரங்கிலும் ஒரு புதிய விவாதத்தை தொடங்கியுள்ளது. தனுஷின் இந்தப் படம், இன்பநிதியின் சினிமா பயணத்திற்கு ஒரு தொடக்கமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.