என் வாழ்க்கை கதை தான் அஜித்தின் ’விஸ்வாசம் பட பாடல்’ ! பிரபல நடிகர்

Webdunia
வெள்ளி, 3 ஜூலை 2020 (14:45 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் அஜித்திற்குப் பிரியமான இயக்குநர் சிவாவின் தம்பியும், பிரபல நடிகருமான பாலா எல்லோருக்கும் பரீட்சயமானவர்.

இவர் தமிழ் சினிமாக்களை விடவும் மலையாள படங்களில் அதிகம் நடித்துவருகிறார். தற்போது ஊரடங்கு நிலவுவதாக அவர் அங்கேயே தங்கிவிட்டார்.

இந்த நிலையில், மனைவியை விட்டு பிரிந்து வாழும் அவருக்கு ஒரு குழந்தை உள்ளது. சமீபத்தில் ஒரு செய்தி வெளியானது அதில் பாலா இரண்டாவது திருமண வாழ்க்கைக்கு தயாராகி விட்டார் என கூறப்பட்டது.

இதையடுத்து அவருக்குப் பலரும் போன் செய்து இதுகுறித்து விசாரிக்க தொடங்கிவிட்டனர். இதனால் நண்பர்கள்,. ரசிகர்கள் ,குடும்பத்தினர் என பலரும் இதுகுறித்து விசாரித்து வருவதால் தான் பெரிதும் வேதனை அடைந்துள்ளதாகவும், இரவு முழுவதும் தூக்கம் வரவில்லை என்று அவர் கூறியதாக செய்திகள் வெளியாகி இருந்தன.

இந்த நிலையில்,  நடிகர் அஜித் நடித்த விஸ்வாசம் என்ற படத்தில் இடம்பெற்ற பாடலான கண்ணான கண்ணே என்ற பாடல் தன் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து அவர் வெளியிடுள்ள வீடியோவில் கூறியுள்ளதாவது,  என் அண்ணன் இயக்கத்தில் வெளியான விஸ்வாசம் படத்தில் அஜித்துக்கும் அவரது மகளுக்கும் இடையேயான பாசத்தை வெளிப்படுத்தும் பாடலான கண்ணான கண்ணே என்ற பாடல் என் வாழ்க்கையை மையமாக வைத்து எழுதப்பட்டது. என்று கூறியுள்ளார்.

மேலும், இப்படம் வெளியான பின் ஒரு நாள் அஜித் எனக்கு அலைபேசியில் அழைத்து,  இந்த பாடல் காட்சியில் நடிக்கும்போது எனக்கு உன் நியாபகம் தான், நீ பழையபடி திரும்பி வர வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார் என தெரிவித்துள்ளார்.  

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்