மக்களுக்கான என் வீடு என்றைக்கும் திறந்திருக்கும்- லெஜண்ட் சரவணன்

Webdunia
புதன், 5 அக்டோபர் 2022 (13:02 IST)
அன்பு வைத்திருக்கும் மக்களுக்கான என் வீடு என்றைக்கும் திறந்திருக்கும் என்று லெஜண்ட் சரவணன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் டெக்ஸ்டைல்ஸ் துறையில் மிகபெரிய சாம்ராஜ்ஜியம் நடத்தி வருபவர் லெஜண்ட் சரவணன். இத்துறையில் சாதனை படைத்திருந்தாலும் சிறு வயது முதல் சினிமாவில் நடிக்க ஆசை இருந்தால், அதற்கான முயற்சியில் இருந்த அவர்,  இயக்குனர்கள் ஜேடி, ஜெர்ரி ஆகியோர் இயக்கத்தில் லெஜெண்ட் என்ற படத்தில் நடித்தார்.
சமீபத்தில், வெளியான இப்படம்  கலைவான விமர்சனங்கள் பெற்று குறிப்பிட்ட வசூலைப் பெற்றது.


ALSO READ: லெஜண்ட் சரவணனின் அடுத்த பட அறிவிப்பு எப்போது? விறுவிறுப்பாக நடக்கும் கதை கேட்கும் படலம்!

இந்த நிலையில், இவர் தன் அடுத்த படம் குறித்த அறிவிப்பை விரைவில் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த  நிலையில், திரு நெல்வேலியில்,லெஜண்ட் சரவணன் பிரமாண்டமாக கட்டியுள்ள புதிய வீட்டில்,24/7 அன்னதானம் நடைபெறுவதாகவும், என் மீது அன்பு வைத்திருக்கும் மக்களுக்கான என் வீடு என்றைக்கும் திறந்திருக்கும் என்று தன் டுவிட்டரில் லெஜண்ட் சரவணா பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்