கார்த்திக் சுப்பராஜ் தயாரிப்பில் மீண்டும் இணையும் மருது கூட்டணி

Webdunia
செவ்வாய், 1 பிப்ரவரி 2022 (16:44 IST)
மருது படத்தின் மூலம் இணைந்த விஷால் – முத்தையா கூட்டணி 6 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது மீண்டும் இணைய உள்ளது.

விஷால் நடிப்பில் சமீபமாக வந்த எந்த படமும் வெற்றி பெறவில்லை. ஆனால் அவர் படத்துக்கு இந்தி டப்பிங்கில் நல்ல மார்க்கெட் இருப்பதால் வண்டி ஓடிக் கொண்டு இருக்கிறது. இந்நிலையில் விஷால் எப்படியாவது ஒரு ஹிட் கொடுக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கிறார். இந்நிலையில் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனத்தில் ஒரு படம் நடிக்க விஷால் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளார்.

இந்த படத்தை இயக்க இயக்குனர் முத்தையா இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே விஷால் நடிப்பில் 2016 ஆம் ஆண்டு உருவான மருது படத்தில் இணைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. முத்தையா இயக்கத்தில் தற்போது கார்த்தி நடிக்கும் விருமன் படத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்