அனிருத்தின் நான்கு படங்களுக்கும் என் இந்த படம் பதிலளிக்கும்… இசையமைப்பாளர் தமன் நம்பிக்கை!

vinoth

புதன், 19 பிப்ரவரி 2025 (13:21 IST)
பாய்ஸ் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான தமன் அந்த படத்தில் ட்ரம்மராக நடித்திருந்தார். உண்மையிலேயே அவர் ட்ரம்மர் என்பதால்தான் அந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. அந்த படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் தோல்வி அடைந்தது.

ஆனால் அதன் பின்னர் தமன் இசையமைப்பாளராக வெற்றி பெற்றார். தமிழை விட தெலுங்கில் அவருக்கு நல்ல வரவேற்புக் கிடைத்தது. தெலுங்கின் முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இப்போது தமன்தான் ஆஸ்தான இசையமைப்பாளர். இந்நிலையில் நீண்ட நாட்களுக்குப் பிறகு அவர் ‘இதயம் முரளி’ திரைப்படத்தின் மூலம் நடிகராகவும் கம்பேக் கொடுத்துள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் அவரளித்துள்ள ஒரு நேர்காணலில் பவன் கல்யாண் நடிப்பில் தான் இசையமைக்கும் OG படம் பற்றி நம்பிக்கையாகப் பேசியுள்ளார். அதில் “அனிருத்தின் விக்ரம், லியோ, ஜெயிலர் மற்றும் பீஸ்ட் ஆகிய நான்கு படங்களின் பின்னணி இசைக்கும் நான் இசையமைக்கும் OG திரைப்படத்தின் பின்னணி இசை பதிலளிக்கும்.” எனப் பேசியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்