அடித்தது யோகம்! ரஜினி - முருகதாஸ் படம் டிராப்லாம் இல்லையாம்....

Webdunia
ஞாயிறு, 11 நவம்பர் 2018 (13:08 IST)
சர்கார் படம் வெளியவதற்கு முன்னர் இது திருட்டு கதை என கூறி நீதிமன்ரம் வரை சென்று பின்னர் இந்த பிரச்சனை இரு முடிக்கு வந்தது. அப்போது முருகதாஸை பலர் ஏளனம் செய்தனர். 
 
ஆனால், படம் வெளியான பிறகு அவரை போல் அரசியலை இப்படி யாரும் விமர்சிக்க முடியாது என பாராட்டவும் செய்தனர். இந்நிலையில், இதற்கு முன்னர் முருகதாஸின் அடுத்த படம் ரஜினியுடன் இருக்க வாய்ப்புள்ளதாக பேசப்பட்ட வந்தது. 
 
ஆனால், திருட்டு கதை பிரச்சனை பூதாகாரம் ஆன போது, முருகதாஸின் அடுத்து படங்களில் நடிகர்கள் யாரும் நடிக்க மாட்டார் என்ற பேச்சு எழுந்து ரஜியின் படமும் டிராப் என கூறப்பட்டது. 
 
தற்போது வந்திருக்கும் தகவலின் படி முருகதாஸ் ரஜினி படம் டிராப் இல்லை நிச்சயம் நடக்கும் என கூறப்பட்டுள்ளது. மேலும், ரஜினி அரசியலுக்கு வர இருப்பதால், அரசியல் சார்ந்த படமாகவும் இது இருக்கலாம் என கூறடப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்