100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன்… இயக்குனர் முருகதாஸின் மெஹா பட்ஜெட் திட்டம்!

Webdunia
திங்கள், 6 மார்ச் 2023 (10:03 IST)
இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் விஜய்யை வைத்து துப்பாக்கி, கத்தி மற்றும் சர்கார் ஆகிய ஹிட் படங்களைக் கொடுத்தவர். அந்த வரிசையில் நான்காவது படமாக விஜய் 65 படத்தை அவர்தான் இயக்க இருந்தார். ஆனால் அவர் ரஜினியை வைத்து இயக்கிய தர்பார் படம் மிகப்பெரிய தோல்வியை அடைந்த நிலையிலும், சம்பளம் விஷயத்தில் ஏற்பட்ட முரண்பாடுகளாலும் முருகதாஸ் அந்த படத்தில் இருந்து விலகினார். அதையடுத்து மீண்டும் ஹிட் படம் கொடுத்து கம்பேக் கொடுக்க வேண்டுமென நினைத்த இப்போது தனது அடுத்த படத்துக்காக பல கதாநாயகர்களிடம் கதை சொல்லி வருவதாக சொல்லப்பட்டது.

மூன்று ஆண்டுகளாக எந்த படத்தையும் இயக்காமல் இருந்த முருகதாஸ் இப்போது சிவகார்த்திகேயனை வைத்து ஒரு படத்தை இயக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது. விரைவில் இவர்கள் இருவரும் இணையும் படம் பற்றிய அறிவிப்பு வரலாம் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படம் கிட்டத்தட்ட 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக உள்ளதாக சொல்லப்படுகிறது. இதில் சிவகார்த்திகேயன் மற்றும் முருகதாஸின் சம்பளமே கிட்டத்தட்ட 60 கோடி ரூபாய்  வரை என்று சொல்லப்படுகிறது. விரைவில் இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்