சிம்பு இஸ் ஸ்வீட்: வதந்திகளுக்கு எண்ட் கார்ட்!!

Webdunia
வியாழன், 10 அக்டோபர் 2019 (17:10 IST)
மப்டி படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிவு பெற்ற நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் நடக்க இருப்பதாக ஞானவேல் ராஜா தெரிவித்துள்ளார். 
 
கன்னடத்தில் சூப்பர் ஹிட்டான சிவராஜ் குமாரின் மப்டி என்ற படத்தின் தமிழ் ரீமேக்கில் சிம்பு, கவுதம் கார்த்திக் ஆகியோர் நடிக்க ஒப்பந்தமாகினர். இந்த படத்தை தயாரிக்க ஸ்டுடியோ க்ரீன் முன்வந்தது. அதன் பின்னர் இந்த படத்தின் அப்டேட் எதுவும் வெளியாகாமல் இருந்தது. 
 
இந்நிலையில், மப்டி படம் கைவிடப்படுவதாக தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார். இது குறித்து ஞானவேல் ராஜா தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் ஒன்றும் அளித்துள்ளார். அந்த புகாரில், மப்டி படத்தின் ஷூட்டிங்கிற்கு சிம்பு சரியாக வரவில்லை. 
இதனால் படத்தின் செலவு அதிகமாகி உள்ளது. படத்தின் ஷூட்டிங் பாதிக்கப்பட்டது. அதேபோல் படத்தின் மற்ற நடிகர்களின் ஷூட்டிங் பாதிக்கப்பட்டது. அவர்களுக்கும் தேவையில்லாமல் இழப்பீடு கொடுக்கும் நிலை நேர்ந்துள்ளது என புகார் அளித்துள்ளார் என செய்திகள் வெளியானது. 
 
ஆனால், ஞானவேல் ராஜா தரப்பில் இந்த செய்திகள் வதந்தி என்று கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே மப்டி படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிவு பெற்ற நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் நடக்க இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்