இயக்குனர் அமீர் நடித்துள்ள மாயவலை படத்தின் ரிலீஸ் அடுத்த ஆண்டுக்கு தள்ளிவைப்பா?

வியாழன், 14 டிசம்பர் 2023 (07:50 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான அமீர், தற்போது நடிகராகவும் சில படங்களில் நடித்து வருகிறார். அவர் நடித்த வடசென்னை, மாறன் ஆகிய திரைப்படங்கள் கவனத்தை ஈர்த்தன.      

இந்நிலையில் இப்போது அமீர் ஹீரோவாக நடிக்கும் மற்றொரு படமாக மாயவலை உருவாகி வருகிறது. இந்த படத்தை இயக்குனர் அமீர் மற்றும் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா ஆகிய இருவரும் இணைந்து தயாரிக்கின்றனர்.

ரமேஷ் பாலகிருஷ்ணன் இயக்கும் இந்த படத்தில் அமீருடன், ஆர்யாவின் தம்பி சத்யாவும், நடிகை சஞ்சிதா ஷெட்டியும் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இந்த படத்துக்கு யுவன் இசையமைக்க, ராம்ஜி ஒளிப்பதிவாளராக பணியாற்றுகிறார். சமீபத்தில் இந்த படத்தின் டீசர் ரிலீஸாகி கவனம் பெற்றது.

இந்த படம் டிசம்பரில் ரிலீஸாகும் என முதலில் அமீர் தரப்பில் சொல்லப்பட்ட நிலையில் இப்போது அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்துக்கு தள்ளிவைக்கப்பட வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. வரிசையாக படங்கள் ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் இந்த தள்ளிவைப்பு செய்யப்பட்டு இருக்கலாம் என சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்