மோகன்லால் நடித்த எம்புரான் திரைப்படம் கடந்த மார்ச் மாதம் 27 ஆம் தேதி ரிலீஸாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. ஆனாலும் 200 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து, மலையாள சினிமாவில் அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையைப் பெற்றுள்ளது.
இதையடுத்து மோகன்லால், ஷோபனா உள்ளிட்டோர் நடிப்பில் தருண்மூர்த்தி இயக்கத்தில் உருவான துடரும் படம் கடந்த வாரம் ரிலிஸானது. இந்த படத்துக்குப் பெரிய அளவில் எந்த விளம்பரமும் செய்யவில்லை. ஆனாலும் முதல் நாள் முதல் காட்சிக்குப் பிறகு படம் பார்த்த ரசிகர்களின் விமர்சனங்கள் மூலம் படம் பிக்கப் ஆகத் தொடங்கியுள்ளது.