நேற்றைய ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே வீரர் ப்ரெஸ்விலுக்கு அவுட் கொடுத்தது சர்ச்சைக்கு உள்ளாக்கியுள்ளது.
நேற்றைய ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே - ஆர்சிபி அணிகள் மோதிக் கொண்ட நிலையில் 213 ரன்களை குவித்த ஆர்சிபி அணி சென்னையை 211 ரன்களில் வீழ்த்தி வெறும் 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் சிஎஸ்கே பேட்டிங்கில் ஆரம்பம் முதலே சிறப்பாக விளையாடி வந்த நிலையில் 172 ரன்கள் குவித்த பிறகே மூன்றாவது விக்கெட் விழுந்தது. மாத்ரே அவுட் ஆனதும் டெவால்ட் ப்ரெவிஸ் பேட்டிங்கிற்கு உள்ளே வந்தார். முதல் பந்தை எதிர்கொண்ட ப்ரெவிஸ்க்கு அம்பயர் நிதின் மேனன் LBW அவுட் கொடுத்தார். ஆனால் ப்ரெவிஸ் இரண்டு ரன்கள் ஓடி முடித்ததும்தான் ரிவ்யூ கேட்டார். ஆனால் ரிவ்யூ டைம் முடிந்துவிட்டதாக அவருக்கு அவுட் கொடுத்தது உறுதி செய்யப்பட்டது.
ஆனால் அதற்கு பிறகு ரிப்ளே பார்த்தபோது பந்து ஸ்டம்ப்பை மிஸ் செய்திருந்தது தெரியவந்தது. இந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், அம்பயர் ஆர்சிபி அணிக்கு ஆதரவாக செயல்பட்டதாக சிஎஸ்கே ரசிகர்கள் சமூக வலைதளங்களில் குற்றம் சாட்டி வருகின்றனர்.
Edit by Prasanth.K