இந்நிலையில் எம்புரான் படத்தின் ப்ரமோஷன் பணிகளுக்காக சென்னை வந்துள்ள மோகன்லால் ரஜினியுடன் ஜெயிலர் படத்தில் நடித்தது குறித்து பேசியுள்ளார். அதில் “ஜெயிலர் படத்தில் நான் நடித்த மேத்யூ கதாபாத்திரம் சிறப்பாக இருந்தது. அதில் நான் நடிக்காமல் வேறு ஒருவர் நடித்திருந்தாலும் நன்றாகவே இருந்திருக்கும். ஆனால் அதில் நான்தான் நடிக்க வேண்டும் என, உதவி செய்ய வேண்டும் என ரஜினி சார் என்னைப் பார்க்க வந்தார். அப்படி ஒரு சூப்பர் ஸ்டார் நடிகர் என்னிடம் உதவி என்று கேட்கும் போது நான் எப்படி வேண்டாம் என்று சொல்ல முடியும்?” எனக் கூறியுள்ளார்.