விக்ரம் டீசரைக் கலாய்த்த திரௌபதி இயக்குனர்… வச்சு செய்யும் நெட்டிசன்ஸ்!

Webdunia
வியாழன், 12 நவம்பர் 2020 (19:41 IST)
விக்ரம் படத்தின் டீசர் நார்கோஸ் சீரிஸின் காப்பி என சொல்லப்பட்ட நிலையில் அதை கலாய்க்கும் விதமாக இயக்குனர் மோகன் ஜி தனது சமூகவலைதளத்தில் ஒரு பதிவைப் பகிர்ந்திருந்தார்.

கமல் நடிப்பில் விக்ரம் என்ற படத்தை இயக்கி வருகிறார் லோகேஷ் கனகராஜ். அது சம்மந்தமான டீசர் ஒன்றை சில நாட்களுக்கு முன்னர் வெளியிட்டு இருந்தார். முதலில் அனைவராலும் ரசிக்கப்பட்ட அந்த டீசர், பின்னர் நெட்பிளிக்ஸில் வெளியான நார்க்கோஸ் சீரிஸின் டீசரின் காப்பி எனக் கண்டுபிடிக்கப்பட்டு இப்போது ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது. அதுபோல தொடர்ந்து தழுவல்களாகவே எடுத்துக்கொண்டு இருக்கும் லோகேஷும் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறார்.

இந்நிலையில் இது சம்மந்தமாக திரௌபதி படத்தின் இயக்குனர் மோகன் ஜி அந்த இரண்டு வீடியோக்களையும் பகிர்ந்து ‘சில்லறைய சிதற விட்டது தப்பா போச்சே’ எனக் கூறியிருந்தார். இந்நிலையில் அவரின் இந்த பதிவில் அவரை நெட்டிசன்கள் பலரும் கலாய்க்க ஆரம்பித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்