நீங்க இப்ப கூட ஹீரோயினா நடிக்கலாமே… லைலாவின் சமீபத்தைய புகைப்படத்திற்கு ரசிகர்களின் கமெண்ட்!

Webdunia
வியாழன், 12 நவம்பர் 2020 (19:35 IST)
தமிழ் சினிமாவில் தனது அபாரமான நடிப்பாற்றலால் அனைவரையும் கவர்ந்த நடிகை லைலா தனது சமீபத்தைய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

2000 ஆம் ஆண்டுகளின் தொடக்கத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் லைலா. சிரிப்பழகி லைலா  அந்த காலத்தில் அஜித், சூர்யா, விக்ரம், பிரசன்னா உள்ளிட்ட பலருடன் நடித்திருந்தார். அவர் நடிப்பில், தீனா, தூள், நந்தா, உன்னை நினைத்து, கண்ட நாள் முதல் என பல படங்கள் ஹிட்டாகின. கடைசியாக அஜித்துக்கு ஜோடியாக  2006ம் ஆண்டு பரமசிவம் படத்தில் நடித்தார். அதன்பின்னர் திருமணம் ஆகி கணவருடன் செட்டில் ஆகிவிட்டார்.

அதன் பின்னர் நடிப்புக்கு முழுக்கு போட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மட்டும் அவ்வப்போது பங்கேற்று வந்தார். இந்நிலையில் தனது உடல் எடையைக் குறைத்து தற்போதைய கதாநாயகிகளுக்கு சவால் விடும் விதமாக ஒல்லியாகி தனது லேட்டஸ்ட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்